நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பனவிற்கு எதிராக ஜே.வி.பி கட்சி எதிர்வரும் நாட்களில் நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கத் தீர்மானித்துள்ளது.
ஜே.வி.பி.யின் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
அவன்ட் கார்ட் சம்பவம் தொடர்பில் பிழையான தகவல்களை பாராளுமன்றில் வழங்கியதாக திலக் மாரப்பன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பாராளுமன்றில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது