கிண்ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட தி/கிண்ணியா மீரா நகர் முஸ்லிம் பாடசாலையில் தரம்-7 இல் கல்வி கற்கும் மாணவர்கள் வகுப்பறையின்றி கூடாரத்தில் கல்வி கற்று வருவதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இவ் விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
தளபாட வசதியற்றும் வகுப்பறையற்ற நிலையிலும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர். இவர்கள் எவ்வளவு சிரமத்துடன் கல்வி பயில்கின்றனர்.
இப்படி இருந்தால் எப்படி மாணவர்கள் கற்பார்கள் மழை காலங்களில் கூடார வகுப்பறைக்குள் இருந்து கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது.
மாணவர்கள் உளநலப் பாதிப்பற்ற கற்றல் நடவடிக்கைகளை தொடர்வதற்கான வகுப்பறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க உரிய அதிகாரிகள் முன்வருமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.