இந்நிலையில், இவ்விரு படங்களுடன் தமன்னாவின் ‘பெட்ரோமாக்ஸ்’ திரைப்படமும் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். `அதே கண்கள்’ படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன், இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.

திகில் கலந்த நகைச்சுவையுடன் எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் யோகி பாபு, முனீஸ்காந்த், சத்தியன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.