தீப்பிடித்து எரிந்த மருத்துவமனை: 4 குழந்தைகள் உட்பட 20 பேருக்கு நேர்ந்த நிலை!2

125

 

ஈராக்கின் தெற்கு பகுதியில் உள்ள திவானியா நகரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையில் தீ விபத்து நேற்றைய தினம் (08-01-2024) இடம்பெற்றுள்ளது.

மருத்துவமனையின் ஒரு பகுதியில் பற்றிய தீ, அடுத்தடுத்த அறைகளுக்கும் வேகமாக பரவ தொடங்கிய நிலையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பல மணித்தியாலம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த 150 நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் அலட்சியமாக இருந்த மருத்துவமனை அதிகாரிகளை பணிநீக்கம் செய்யும்படி ஈராக் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

 

SHARE