தீப்பிடித்து எரிந்த வீடு ஹீரோவாக மாறிய நாய்! நடந்தது என்ன?

244

625-500-560-350-160-300-053-800-748-160-70-1

அமெரிக்காவில் தீப்பிடித்து எரிந்த வீட்டில் பெண்ணின் உயிரை காப்பாற்றிய நாயின் செயல் அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றுள்ளது.

அமெரிக்காவின் Philadelphia மாகாணத்தில் கடந்த 23 ஆம் திகதி தீயணைப்பு படையினருக்கு அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீப்பிடிப்பதாக தகவல் வந்துள்ளது.

இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்து விட்டு வீட்டிற்குள் சென்றுள்ளனர். வீட்டிற்குள் சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காரணம் தீப்பற்றி எரிந்த போது வீட்டின் உள்ளே பெண் ஒருவர் அதனுள் சிக்கியுள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக அவர்கள் வீட்டில் வளர்த்த நாய் அவர் மீது தீ எதுவும் பட்டு விடாமல் இருப்பதற்காக. அவர் மேல் ஏறி படுத்து அவரை காப்பாற்றியுள்ளது.

அதையும் மீறி அவருக்கு சில இடங்களில் தீக்காயம் பட்டுள்ளதாகவும், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நாயுக்கும் சில காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது நல்ல நிலைமையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

625-0-560-320-500-400-194-800-668-160-90

 

SHARE