தீயினால் ஏற்படவிருந்த பேராபத்து பிரதேசவாசிகளின் உதவியால் தடுப்பு

553

ஹற்றன் நகரில் டன்பார் வீதியில் அமைந்துள்ள இரும்பு பொருட்கள் விற்பனை கடை ஒன்றில் நேற்று (13) இரவு சுமார் 10.30மணியளவில் ஏற்பட்ட தீயினால் கடை முற்றாக சேதமடைந்துள்ளதாக ஹற்றன்பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹற்றன் பொலிஸார், பிரதேசவாசிகள் மற்றும் ஹற்றன் டிக்கோயா நகர சபையின்தீயணைப்பு பிரிவினர் ஆகியோர் இணைந்து இரண்டு மணித்தியால முயற்சியின் பின்னே தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இத்தீயினால் எவருக்கும் பாதிப்படாதா போதிலும் உடனடியாக செயற்ப்பட்டு தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்ததனால் ஏனைய கடைகளுக்கு தீ பரவாமல் ஏற்படவிருந்த பேராபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இக்கடைக்கு அருகாமையில் உள்ள குதிரை பந்தைய கடையொன்றில் மலசல கூடத்திற்கு சென்ற ஒருவர் மலசல கூடத்தின் சூட்டினை உணர்ந்து சுற்றிப்பார்த்துள்ளார்.

அதனை தொடர்ந்து பக்கத்தில் உள்ள கடையிலிருந்து புகை வருவதனை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்ததனையடுத்து தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இத்தீயிக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை ஹற்றன் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-1 625-0-560-320-160-600-053-800-668-160-90-2 625-0-560-320-160-600-053-800-668-160-90-3 625-0-560-320-160-600-053-800-668-160-90-4 625-0-560-320-160-600-053-800-668-160-90

 

SHARE