தீயில் கருகியது கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் வாகனம்.

308
கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு சொந்தமான வாகனம் இன்று அதிகாலை தீப்பற்றி எரிந்துள்ளது.

திருகோணமலை சிவன்கோயிலடியில் உள்ள வாகன திருத்தும் நிலையத்திற்கு அருகில். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு சொந்தமான நிசன் ரக பிக்கப் வண்டி தீயினால் முற்றாக சேதமடைந்துள்ளது.

தீ அணைப்பு வீரர்கள் நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

அதிகாலை 4.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது எனவும் தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் திருகோணமலைப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE