“தீராத விளையாட்டு பிள்ளை” கெய்லுக்கு எதிராக குவியும் புகார்கள்

625
மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெய்லின் மோசமான நடத்தை காரணமாக அவருக்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல், அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் டி20 தொடரில் பங்கேற்று வருகிறார்.

இதில் பேட்டி எடுக்க வந்த அவுஸ்திரேலியா தொலைக்காட்சி ஒன்றின் பெண் நிருபர் மெக்லாக்லின் கெய்லினின் அழகை வர்ணித்து தகாத முறையில் நடந்து கொண்டார்.

இதனால் அவருக்கு 10,000 அமெரிக்க டொலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டது.

பின்னர் பெண் நிருபரிடம் தகாத முறையில் பேசியதற்காக கிறிஸ் கெய்ல் மன்னிப்பு கேட்டார். கெய்லின் மன்னிப்பை ஏற்றுகொள்வதாக பெண் நிருபர் மெக்மெக்லினும் அறிவித்தார்.

டிரெஸ்சிங் ரூம்மில் பெண்ணிடம் எல்லை மீறல்:-

இதற்கிடையில் அவுஸ்திரேலிய பெண் ஒருவர் உலகக்கிண்ணப் போட்டியின் போது கெய்ல் தன்னிடம் எல்லை மீறி நடந்து கொண்டதாக புகார் தெரிவித்துள்ளார்.

உலகக்கிண்ணத் தொடரில் உதவி செய்வதற்காக ஒவ்வொரு அணிக்கும் ஒரு பெண் பணியமர்த்தப்பட்டனர்.

இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு நியமிக்கப்பட்ட பெண், டிரெஸ்சிங் ரூம் வந்த போது, துண்டுடன் நின்று கொண்டிருந்த கெய்ல் துண்டை அவிழ்த்து அவரிடம் ஆபாசமாக பேசியுள்ளார்.

இது தொடர்பாக மேற்கிந்திய தீவுகள் அணியின் மேலாளரிடம் அவர் அப்போது புகார் கூறியுள்ளார்.

ஆனால் இது தொடர்பாக அவர் நடவடிக்கை எடுக்காமல் ’பெண் ஊழியர்களிடன் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும்’ என்று மின்னஞ்சல் மட்டும் அனுப்பியுள்ளார்.

பெண்களின் மீது மோகம் கொண்டவர்:-

அவுஸ்திரேலியா தொலைக்காட்சியின் பெண் நிருபர் மெக்லாக்லின் கெய்லிக்கு முன் பல பெண் நிருபர்களிடன் கெய்ல் எல்லை மீறியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

9 நியூஸ் தொலைக்காட்சியின் நிருபர் யோனி ஸம்ப்ஸன் கூறுகையில், “ஒருநாள் டுவிட்டர் வழியாக என்னை தொடர்பு கொண்ட கெய்ல், என்னை இரவு விருந்துக்கு அழைத்து செல்வதாக கூறினார். ஆனால் நான் அவரை சந்திக்கவில்லை.

என்னை பொறுத்தவரையில் கெய்ல், பெண்கள் மீது மோகம் கொண்டவராக உள்ளார். இந்த வார்த்தை கடினமானது தான். ஆனால் அவர் அதைத்தான் செய்து வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் நிருபர் நேரோலி மெடோவ்ஸ் கூறுகையில், ’கடந்த 2011ம் ஆண்டு நான் கிறிஸ் கெய்லை பேட்டி எடுத்தேன்.

அப்போது அவர், “என்னை மன்னித்துவிடுங்கள் உங்களது அழகான முகத்தை கண்டு நீங்கள் கேட்ட கேள்வியை மறந்து விட்டேன். மறுபடியும் கேள்வியை திருப்பி கேட்க முடியுமா என்று கேட்டார்.”

கெய்ல் இது போன்ற செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபடுகிறார். அவர் கொடூரத்தனமான பழக்கத்தை கொண்டுள்ளார்‘ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

பிக் பாஷ் டி20 தொடரில் தடை:-

மோசமான நடத்தை காரணமாக மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக ஆடி வரும் கிறிஸ் கெய்லை அடுத்த பிக் பாஷ் டி20 தொடரில் இருந்து விளையாட அனுமதிக்க கூடாது என்று பிரபல அவுஸ்திரேலிய நிருபர் ரோபட் கிராடக் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஆலன் பார்டரும் கெய்லுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த சீசனில் அவர் இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

கெய்ல் எப்பவுமே இப்படித் தானா:-

கெய்ல் வேடிக்கையாக பேசினாலும் அவர் பெண்களிடன் நடந்து கொள்ளும் விதம் அனைவரின் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது.

வீட்டுக்குள் அரை நிர்வாண கிளப், மது விருந்து என எப்போது பெண்களுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவு செய்வார். இதனால் அவரது டுவிட்டர் பக்கமே ஆபாச பக்கமாக காட்சியளிக்கிறது.

தொழில் முறைப் போட்டிகளில் பங்கேற்கும் போது கெய்ல் இது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்று இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தனே கூறியிருந்தார்.

SHARE