தீர்மானத்தை அமுல்படுத்த அரசாங்கத்தின் மெய்யான ஒத்துழைப்பு அவசியம்

305

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தின் மெய்யான ஒத்துழைப்பு அவசியமாகின்றது என க்ளோபல் தமிழ் போரம் அமைப்பு தெரிவித்துள்ளது.
தீர்மானத்தை அமுல்படுத்துவது குறித்து இலங்கை அரசாங்கத்தின் மெய்யான அர்ப்பணிப்பும் தயார் நிலையுமே முதன்மையானது என அமைப்பின் தலைவர் வணக்கத்திற்குரிய எஸ்.ஜே.இமானுவெல் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.
உண்மையை வெளிக் கொணர்ந்து அனைத்து மக்களுக்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கும் விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் ஹல் ஹ_செய்னை பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமை ஒன்றின் மூலம் நியாயம் கிடைக்கும் என பாதிக்கப்பட்டவர்கள் நம்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் திருப்திகரமாக அமைந்துள்ளது என்ற போதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கி உண்மையை வெளிக்கொணர்வதற்கான பூரண அர்ப்பணிப்பினை இதுவரையில் புதிய அரசாங்கமும் முழுமையாக வெளிப்படுத்தவில்லை என  அவர் தெரிவித்துள்ளார்.
தமிழர் பிரதேசங்களில் இராணுவ மயமாக்குதல்கள் குறைக்கப்படுவதற்கு பதிலாக மேலும் அதிகரித்துச்செல்லப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் துரித கதியில் நிறைவேற்றப்பட வேண்டுமென அருட்தந்தை இமானுவெல் கோரியுள்ளார்.

SHARE