தீவிரவாதிகளை இலக்கு வைத்த வான் வெளித் தாக்குதலில் 7 பேர் பலி

157

தலீபான் தீவிரவாதிகளை இலக்கு வைத்து அமெரிக்க கூட்டுப் படையினர் நடத்திய வான் வெளித் தாக்குதலில் 7 தலீபானியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆப்கானிஸ்தானின் காந்தஹார் மாகாணத்தில், மேவான்ட் பகுதியிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துன் இந்த தாக்குதல் காரணமாக தலீபான் பயங்கரவாதிகளின் ஆயுத தொழிற்சாலையும், சக்தி வாய்ந்த வெடிகுண்டு கருவிகளும், கண்ணிவெடிகளும் அழிக்கப்பட்டதாகவும்  தகவல்கள் மேலும் கூறுகின்றன.

எனினும் இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்க கூட்டுப்படை தாக்குதல் தொடர்பில் தலீபானியர்கள் எதுவித கருத்துக்களை தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

SHARE