தீவிர பணியில் இறங்கிய சித்தார்த்

264

சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இப்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் பெரிய பங்கு வகித்தவர்கள் நடிகர் சித்தார்த், ஆர்.ஜே. பாலாஜி.

இவர்களுடன் சென்னை மைக்ரோ என்று பெயரிடப்பட்ட இந்த குழுவில் பல தன்னார்வலர்கள் கை கோர்த்து வெள்ள நிவாரணப் பணிகளை செய்தனர்.

அதன்படி தமிழகத்தில் மட்டுமில்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திராஆகிய மாநிலங்களிலிருந்தும் மக்களின் அடிப்படை தேவைக்கான பொருட்கள், பணம் வந்து குவிந்தது.

இந்த அமைப்புக்கு வந்த நிதி மொத்தம் 3,39,18,793 ரூபாய். இந்த நிதியை தமிழகத்தில் சீரமைப்புக்காக இல்லங்களில் வசிப்போரின் மறுவாழ்வுக்காக பகிர்ந்து அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார் நடிகர் சித்தார்த்.

இவர்களின் இந்த மனிதநேய பணி தொடர வாழ்த்துக்கள்.

SHARE