மஸ்கெலியா நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட லக்ஷபான தோட்டத்தில் இடம் பெற்ற தீ விபத்தினால்இரண்டு குடியிருப்புகள் சேதமாகியுள்ளதுடன் நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர்
தீ விபத்துச்சம்பவமானது 06.08.2016 சனிக்கிழமை இரவு 9.30 மணியளவிலே சம்பவித்துள்ளது
இரண்டு வீடுகளை கொண்ட குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தீல் ஒரு வீடு முழுமையாக சேதமுற்றுள்ளதாகவும் மற்றைய வீடு பகுதியளவில் சேதமுற்றுள்ளதுடன் வீட்டு உபகரணங்கள் ஆவணங்கள் போன்றன எறிந்து நாசமாகியுள்ளது
குறித்த குடியிருப்பில் வசித்தவர்களுக்கு எவ்வித பாதிப்புகளூம் ஏற்படவில்லையென்றும் தற்காளிகமாக உறவினர்வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் பாதிப்புக்குள்ளான இரண்டு வீடுகளில் ஒரு வீட்டில் மாத்திரமே குடியிருப்பாளர்கள் தங்கீயிருந்தாகவும் மற்றைய குடியிருப்பாளர்கள் உறவினர்கள் வீட்டிற்கு சென்றிருந்த வேலையில் தீ பரவியுள்ளது
திடீரென ஏற்பட்ட தீயை நல்லத்தண்ணி பொலிஸாரூம் பிரதேசவாசிகளும் இணைந்து கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டுவந்துள்ளனர்
மின்சார கோளாரே தீ விபத்துக்கான காரணமென்று சேத விபரம் தொடர்பில் விசாரணையை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர்
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்