துணி துவைக்கும் இயந்திரத்தில் தவறி விழுந்த 2 வயது குழந்தை!! பரபரப்பு காட்சி!

308

கர்நாடக மாநிலத்தில் துணி துவைக்கும் எந்திரத்தில் 2 வயது குழந்தை சிக்கி தவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாற்காலி மீது ஏறி 2 வயது குழந்தை விளையாடி கொண்டிருந்த போது அருகில் இருந்த துணி துவைக்கும் இயந்திரத்தில் தவறி விழுந்தது. அப்போது இயந்திரத்தின் மேல்மூடி எதிர்பாராத விதமாக மூடிக் கொண்டது.

சிறிது நேரம் குழந்தையை தேடிய தாய் துணி துவைக்கும் இயந்திரத்தில் இருந்து அழுகுரல் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து வாஷங் மெஷினை துண்டு துண்டாக வெட்டி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை பத்திரமாக தாய் மீட்டெடுத்தார்.

வாஷிங் மெஷினில் விழுந்த குழந்தைக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. குழந்தை சிக்கியிருந்த போது இயக்கப்பட்டிருந்தால் பெரும் விபரீதம் ஏற்பட்டிருக்கும். நல்ல வேளையாக அவ்வாறு நடைபெறவில்லை என அக்கம் பக்கத்தினர் நிம்மதி தெரிவித்தனர்.

 

SHARE