துன்புறுத்தலுக்கு உள்ளான வெளிநாட்டு பணிப்பெண்கள் இலங்கையில்

339

வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாகச் வேலைவாய்ப்பு பெற்றுச்சென்று அங்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த பெண்கள் 15பேர் மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

குவைத்துக்கு வீட்டுப்பணிப்பெண்களாகச் சென்றவர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

தாம் சேவைபுரிந்த வீடுகளில் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்த இந்த பெண்கள், குவைத் தூதரகத்தில் தஞ்சமடைந்தனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொண்ட நடவடிக்கையையடுத்து அவர்கள் நாட்டுக்கு மீண்டும் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பிய இந்த பெண்கள், தமது வீடுகளுக்குச் செல்ல தேவையான வசதிகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செய்துகொடுத்துள்ளது.

housemaid

SHARE