உடுகம பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடுகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகியாதெனிய பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாகியாதெனிய பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய தெல்பே ஆரச்சிகே மனோஜ் பிரியந்த எனப்படுபவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் சந்தேக நபரை உடுகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படத்தியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.