துப்பாக்கியைக் காட்டி வியாபார நிலையத்தில் கொள்ளையிட்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் கொட்டாவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த சந்தேக நபரை கொட்டாவை-ருக்மல்கம பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபரை கைது செய்த சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்து 2 கிலோ 200 மில்லிகிராம் கஞ்சாவையும், துப்பாக்கி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்தேக நபரை இன்றைய தினம் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கொட்டாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.