துப்பாக்கி ஏந்தும் நயன்தாரா

536

 

‘டிமாண்டி காலனி’ திரைப்பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கவுள்ள புதிய படத்தில் நயன்தாரா பொலிஸ் கமிஷனர் வேடத்தில் நடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

அருள்நிதி கதாநாயகனாக நடித்த ‘டிமாண்டி காலனி’ திரைப்படத்தை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. இவர் தற்போது அதர்வா கதாநாயகனாக நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ என்னும் படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் நடிகை நயன்தாரா முக்கியமான பொலிஸ் கமிஷனர் வேடத்தில் நடிக்க உள்ளதாக திரைப்படக் குழுவினரிடம் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த கதாபாத்திரம் நயன்தாராவை மனதில் கொண்டுதான் இயக்குனரால் உருவாக்கப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நயன்தாரா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்று வெளியான தகவல்கள் உண்மையில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார். கேமியோ பிலிம்ஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது.

SHARE