தும்மலிலிருந்து விடுபட சில வழிகள்

270

பெரும்பாலான மழைக்காலங்களில் பலரும் தும்மலால் பெரும் அவதிக்குள்ளாகுவதுண்டு.

ஒரு தும்மலின் வேகம் மணிக்கு 160 கி.மீ. என ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.

பொதுவாக தும்மலானது ஒவ்வாமைதான் தும்மலின் அடிப்படைக் காரணம். வீட்டுத் தூசு, ஒட்டடை, பருத்தி, பஞ்சு, சணல், சாக்கு, கயிறு, கம்பளி, சிமெண்ட், சுண்ணாம்பு, ஆஸ்பெஸ்டாஸ், உமி போன்றவற்றின் தூசு மூக்கில் பட்டதும் அடுக்கு தும்மல் தொடங்கிவிடும்.

தும்மல் வருவதுபோலத் தோன்றும்போது நுரையீரலிலுள்ள காற்றை ஆழ வெளியேற்றுவதினால் தும்மலின்போது அழுத்தம் குறையும்.

மேலும் தும்மலிருந்து விடுபட ஒருசில கை வைத்தியங்கள் உள்ளன. தற்போது அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

  • கொதிக்கும் நீரில் யூகலிப்டஸ் எண்ணெயை சில துளிகள் விட்டு, அந்நீரில் ஆவிப் பிடித்தால், தும்மல் மட்டுமின்றி, மூக்கடைப்பு, மூக்கு ஒழுகல் போன்றவற்றில் இருந்தும் விடுபடலாம்.
  • ஒரு கப் சுடுநீரில் 2 டீஸ்பூன் சோம்பை கசக்கிப் போட்டு, மூடி வைத்து 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் வடிகட்டி தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால், தும்மல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். சோம்பை நீரில் சேர்த்த பின் நீரை மீண்டும் சூடேற்ற வேண்டாம். அப்படி சூடேற்றினால், அதன் சக்தி போய்விடும்.
  • 1 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூளை வெதுவெதுப்பான நீரில் போட்டு, தினமும் 2-3 வேளை குடித்து வந்தால், தும்மல் அடங்கும். அதுவே அந்நீரைக் கொண்டு வாயைக் கொப்பளித்தால், இருமலுக்கு காரணமான வைரஸ் மற்றும் கிருமிகள் அழியும்.
  • ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் உலர்ந்த சீமைச்சாமந்தி பூவைச் சேர்த்து, சில நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதில் தேன் கலந்து தினமும் குடித்து வர, தும்மல் வருவதைத் தடுக்கலாம்.
  • இஞ்சியை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தால், தும்மல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். மேலும் இஞ்சி சுவாச கோளாறுகளையும் சரிசெய்யும்.
  • 4-5 பூண்டு பற்களை எடுத்துக் கொண்டு, நன்கு அரைத்து பேஸ்ட் செய்து, அந்த வாசனையை நுகர்ந்தால், சுவாசப் பாதையில் உள்ள கிருமிகள் அழிந்து சுத்தமாகி, தும்மல் மற்றும் இதர சுவாச கோளாறுகளில் இருந்து எளிதில் விடுபடலாம்.
  • ஒரு டம்ளர் கொதிக்கும் நீரில் 2-3 டீஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து, தண்ணீர் பாதியாக குறையும் வரை கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அந்நீரை குடித்தால் தும்மல் வருவது நின்றுவிடும்.
  • 5-6 பாகற்காயின் இலைகளை நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் இலைகளை அகற்றிவிட்டு, அதில் சிறிது வெதுவெதுப்பான நீர் சிறிது சேர்த்து, தேன் கலந்து குடித்து வர, சளி, இருமலால் ஏற்படும் தும்மலைத் தடுக்கலாம்.

SHARE