துருக்கி தாக்குதல் குறித்து இலங்கை கண்டனம்

251

download

துருக்கியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதல் காரணமாக 51 பேர் பலியாகியுள்ளதாகவும், 100இற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

துருக்கியில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றின் போதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இலங்கையை சேர்ந்த யாத்ரீகர்களும் இந்த தாக்குதலின் போது பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மகிஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.

காஸியான்டிப், இஸ்தான்புல் போன்ற நகரங்களிலுள்ள ஐ.எஸ்.ஸின் ரகசிய உள்ளூர் உறுப்பினர்களில் உள்ள 12 வயது சிறுவன் மூலமே இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்று துருக்கியின் ஜனாதிபதி Tayyip Erdogan கடந்த ஞாயிற்றுக் கிழமை தெரிவித்துள்ளார்.

SHARE