விக்ரம் நடிப்பில் ஸ்கெட்ச் க்கு பிறகு அடுத்து வெளிவரவிருக்கும் படம் துருவ நட்சத்திரம். இப்படம் இயக்குனர் கவுதம் மேனனின் கனவு படம், முதலில் சூர்யாவை வைத்து துவங்கப்பட்ட இந்த படம் பிறகு சில காரணத்தால் சூர்யா விலக விக்ரம் உள்ளே வந்தார்.
இந்நிலையில் கிட்டத்தட்ட 75 சதவீதம் படப்பிடிப்பை முடித்து விட்டாராம் கவுதம். சமீபத்தில் கூட இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் விக்ரம் சமீபத்திய ஒரு பேட்டியில் துருவ நட்சத்திரத்தின் ட்ரைலர் ரெடி, நான் பார்த்தேன், பிரம்மிப்ப இருக்கு இது நம்ம படமா , அவ்வளவு ஸ்டைலிஷா ஒரு இங்கிலிஷ் படம் ட்ரைலர் போல் உள்ளது. எனது ரசிகர்களின் கருத்துக்காக காத்திருக்கிறேன் என உற்சாமாக ட்ரைலரை பற்றி கூறினார் விக்ரம் .