துரோகம் இழைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை! மத்திய செயற்குழு கூடும்!- துமிந்த

236
mahinda-group-01
கட்சிக்கு துரோகம் இழைத்தவர்களை தண்டிக்க விரைவில் கட்சியின் மத்திய செயற்குழு கூடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வெகு விரைவில் கட்சியின் மத்திய செயற்குழு கூடும் என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க நேற்று கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கு அமைய கட்சிக்கு துரோகம் இழைத்தவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவர்.

இந்த தீர்மானம் தனியொருவரது தீர்மானமாக அமையாது, கட்சியின் மத்திய செயற்குழுவே இந்த தீர்மானத்தை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடுமையான எதிர்ப்பிற்கும் மத்தியில் கட்சியின் உத்தரவினை மீறி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றமை குறித்தே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

SHARE