மும்பையில் நடைபெற்ற துர்காஷ்டமி பூஜைக்கு உலக அழகிய ஐஸ்வர்யா அன்பினை வெளிப்படுத்தும் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து எளிமையாக வந்திருந்தார்.
மும்பையில் உள்ள Ramakrishna Mission மருத்துவமனையில் துர்காஷ்டமி பூஜை நடைபெற்றது.
இதில், கலந்துகொண்ட அமிதாப்பச்சன் நேரு ஆடை போன்று ஜாக்கெட் அணிந்திருந்தார். மனைவி ஜெயாபச்சன் மற்றும் மகள் ஸ்வேதா ஆகிய இருவரும் புடவை அணிந்து வந்திருந்தனர்.
ஐஸ்வர்யா ராய், வெள்ளை நிற சுடிதார் அணிந்து வந்திருந்தார். அதற்கு ஏற்றாற்போலவே தனது மகளுக்கும் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறத்தில் சுடிதார் அணிவித்திருந்தார்.
அபிஷேக் தனது மகளுக்கு பொருத்தம் கொடுக்கும் விதமாக கரும் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்திலான குர்தா அணிந்து வந்திருந்தார்.