முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மைய பல நாட்களாக துவிச்சக்கரவண்டிகள் திருடப்பட்டு வந்துள்ளன.
இந்நிலையில் இன்றையதினம் துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர் புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரகசிய கமராவின் உதவியுடன்
தர்மபுரம் பகுதியை சேர்ந்த 49 வயது மதிக்கதக்க நபர் இரகசிய கமராவின் உதவியுடன் இன்று புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
துவிச்சக்கர வண்டிகள் மீட்பு
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடம் இருந்து 6 துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த நபரை நாளை(23) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த இருப்பதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.