யுவதி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தி கொலை செய்த குற்றத்தின் அடிப்படையில் சகோதரர்கள் மூவருக்கு மரணதண்டனை வழங்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நோட்டன் பிரிஜ் – அலுஓய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மூவருக்கே இவ்வாறு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி இவர்கள் மூவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று நுவரெலியா மேல்நீதி மன்றத்தில் குறித்த கொலையாளிகளுக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், குற்றவாளிகள் மூவரும் 24,32 மற்றும் 35 வயதானவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.