தூக்கத்திலேயே மரணம்! கதறும் தாய்

177

பிரித்தானியாவில் அரிதான நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி உறங்கும்பொழுதே பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த 9 வயது சிறுமியான ஜெசிகா, தன்னுடைய தாயிடம் தலைவலிப்பதாக கூறிவிட்டு உறங்க சென்றுள்ளார்.

நீண்ட நேரமாக சிறுமி உறங்கி கொண்டிருந்ததால், அவளை எழுப்புவதற்காக சிறுமியின் பாட்டி அறைக்கு சென்று பார்த்துள்ளார்.

அங்கு நினைவிழந்த நிலையில் சிறுமி கிடப்பதை பார்த்த பாட்டி உடனடியாக ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமிக்கு 4 மணி நேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று நடந்த சிறுமியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் உறவினர்கள் அனைவரும் ஜெஸிகாவின் படம் பொறித்த டிசர்ட்டை அணிந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அப்போது பேசிய அவருடைய தாய் மாமா ட்ரேசி (35), என்னுடைய மகள் தலைவலி என கூறிவிட்டு தான் உறங்க சென்றாள். ஆனால் அதன் பின்னர் அவள் எழாமல் இருப்பாள் என்பதை நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

1000-ல் ஒருவருக்கு மட்டுமே வரும் பலவீனமான மூளை இரத்த அழுத்த நோய் என்னுடைய மகளுக்கு வந்திருக்கிறது என்பதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தான் தெரிந்தது என கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார்.

SHARE