தூக்கமின்மை அபாய விளைவுகளை தரக்கூடும்

149

அதிக நேரம் அல்லது குறுகிய நேரம் நித்திரை கொள்வதென்பது புகைபிடித்தலால் உருவாகும் அபாய விளைவுகளுக்கு நிகரான விளைவுகளை தரக்கூடும் என ஆய்வொன்று எடுத்துக்காட்டுகின்றது.

சுவீடனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு 1,463 பேரில் மேற்கொண்டிருந்த ஆய்வொன்றிலேயே இது தெரியவந்துள்ளது.

இது பற்றி ஆய்வாளர் Moa Bengtsson கூறுகையில், “ஓய்வில்லாமல் உழைப்பவர்கள் அதிக நேரம் நித்திரை கொள்வதென்பது தமது நேரத்தை வீணடிப்பதாக எண்ணிக் கொள்கின்றனர். ஆனால் இது பிற்காலத்தில் இதயம் சார்ந்த நோய்களை ஏற்படுத்தக்கூடும்” என்கிறார்.

இவர்கள் மேற்கொண்டிருந்த ஆய்வில் போதியளவு நித்திரையின்மையால் ஏற்படும் இதய நோய்களின் தாக்கம் கிட்டத்தட்ட புகைப்பிடித்தலினால் உண்டாகும் தாக்கத்திற்கு அல்லது 50 வயதில் ஏற்படக்கூடிய நீரிழிவு நோயின் தாக்கத்திற்கு ஒப்பானது என வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இது நீரிழிவு நோய்கள், உடற் பருமன் அதிகரித்தல் மற்றும் உயர் குருதியமுக்கம் போன்றவற்றையும் ஏற்படுத்தக்கூடும் என தெரியவருகிறது.

SHARE