தூக்குத் தண்டனை அமுல்படுத்த காரணம் என்ன? மறைமுகமாக செயற்படுவது யார்?

189

இலங்கையில் தற்போது காணப்படும் சட்டம், ஒழுங்கு மற்றும் நீதித்துறை தொடர்பில் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

போதைப்பொருள் வர்த்கத்தை முற்றாக ஒழிக்க மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நடைமுறை தற்போது இலங்கையில் மேலோங்கியுள்ளது.

இந்நிலையில் மரண தண்டனை தொடர்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சம்பிக்க கருத்து வெளியிட்டார்.

குற்றவாளிகள் சிறைச்சாலைக்குள் இருந்து கொண்டு, போதைப் பொருள் விற்பனையிலும் ஈடுபடுவதாயின் தவறு எங்கு இருக்கின்றது, அதனை உடனடியாக கண்டறிய வேண்டும்.

போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் குற்றச் செயல்கள் என்பவற்றை கட்டுப்படுத்த தூக்குத் தண்டனை அவசியம் என சமூகத்தில் கருத்தொன்று வளர்ந்துள்ளது.

நாட்டிலுள்ள சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸாரும், நீதிமன்றமும் சிறைச்சாலையும் ஒழுங்காக செயற்பட வில்லை என்பதே இதன்மூலம் வெளியாகி உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாரிய போதைப்பொருள் விநியோகம் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 18 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்ற ஜனாதிபதி அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE