தீபாவளிக்கு கமல்ஹாசன் நடித்த தூங்காவனம் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருவதாக கூறப்படுகின்றது.
ஆனால், வேதாளம் படத்தின் வசூல் வேட்டையால் தூங்காவனம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாம். அமெரிக்காவில் மட்டும்தூங்காவனம் நன்றாக ஓடுவதாக கூறப்படுகின்றது.
சமீபத்தில் வந்த தகவலின் படி அமெரிக்காவிலும் தூங்காவனம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லையாம், குறிப்பாக நேற்று ஒரு திரையரங்கில் ஒற்றை இலக்கத்தில் தான் கூட்டமே இருந்ததாம். இச்செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது