தூய்மையே சேவைத்திட்டம் சச்சின் டெண்டுல்கரை பாராட்டிய பிரதமர் மோடி …!

264

மத்திய அரசின் ‘தூய்மையே சேவை’ பிரசாரத்தின்கீழ், முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர், பாந்திராவில் உள்ள தெருக்களில் துடைப்பம் ஏந்தி சுத்தம் செய்தார். சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்திருக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் சச்சின் டெண்டுல்கர். பூமியை நமது தாய்க்கு நிகராக போற்றுகிறோம். ஆங்காங்கே காணப்படும் அழுக்கு மற்றும் குப்பை காரணமாக நமது தாய் பூமியின் அழகு சீரழிவதை காணும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது.

நாம் பொதுவாக வீடுகளில் குப்பையை போட மாட்டோம். ஆனால், வெளியில் குப்பைகளை கொட்டுகிறோம். இது எனக்கு பிடிக்காத வி‌ஷயம்.

ஆகையால், ஒவ்வொருவரும் ‘தூய்மையே சேவை’ பிரசாரத்தில் பங்கேற்று சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் மும்பையின் அழகு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தேசமும் சுகாதாரத்துடன் காணப்படும் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்து உள்ளார்.

துடைப்பம் ஏந்தி தெருக்களை சுத்தம் செய்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். தூய்மை இந்தியா திட்டத்தில் பெருமளவில் பங்களிப்பு செய்துவரும் இளைஞர்களை மிகவும் மகிழ்ச்சியோடு பார்க்கின்றேன். நம்முடைய இளைஞர் சக்திகள் சேர்ந்து தூய்மை இந்தியா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தூய்மை இந்தியா திட்டத்தில் சச்சினின் தொடர்ச்சியான பங்களிப்பு மிகவும் பாராட்டத்தக்கது. அவருடைய நடவடிக்கையினால் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் ஊக்கமளிக்கப்படுவார். அஜித் தாக்ரேவை தன்னுடைய இளைய நண்பர் என குறிப்பிட்டு தூய்மை இந்தியா திட்டத்தில் அவருடைய பங்களிப்பையும் பாராட்டி உள்ளார்.

SHARE