தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பட்டம்!

298
தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களது பிரச்சினைகள் ஐ.நா விசாரணைகளுக்கு உட்படுத்தப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பட்டம் இன்று காலை 9 மணியளவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்றலில் நடைபெற்றது.

யுத்தக் குற்ற நீதிமன்ற விசாரணைகளில் முஸ்லிம்களின் இழப்புக்களையும் பாரபட்சமின்றி உள்வாங்கும் பொருட்டு, விசாரணைக் காலத்தை 1985 வரைக்குமாகப் பின்னகர்த்தல், கிடப்பில் போடப்படும் வட மாகாணா முஸ்லிகளின் மீள்குடியேற்றத்தையும் புனர்வாழ்வையும் துரிதப்படுத்தல், இன முரண்பாட்டுத் தீர்வு முயற்சிகளில் முஸ்லிம் விவகாரங்களுக்கு சமாந்திரமாகக் கையாளப்படல், போன்ற விடையங்களை உள்ளடக்கி இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் தென்கிழக்குப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் பிரகடனமும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE