தென்கொரியாவிற்கு வேலைவாய்ப்பிற்காக செல்லும் இலங்கை பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது.
தென்கொரியாவிற்கு சுற்றுலா சென்றுள்ள வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும், தென்கொரிய வெளிநாட்டு அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதற்கான இணக்கப்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தென்கொரியாவில் தற்சமயம் தொழில் புரியும் இலங்கையர்களுக்கான மேலதிக வசதிகள் பல செய்து கொடுப்பதற்கு தென்கொரிய வெளிநாட்டமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 42,000 இலங்கைப் பணியாளர்கள் தென்கொரியாவில் தற்சமயம் பணிபுரிவதாகவும் வெளிநாட்டமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.
இவ்வாறு தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பானது இரு நாடுகளுக்கிடையில் பொருளாதார உறவை பலப்படுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.