தென்கொரிய பாராளுமன்ற உறுப்பினர் தற்கொலை

131

தென் கொரியா நாட்டில் ஜஸ்டிஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ரோக் ஹோ சான். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. அவர் சட்ட விரோதமாக செயற்படுவதாகவும் 30 இலட்சம் ரூபா லஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பாக ரோக் ஹோ சானிடம் தென் கொரியா புலனாய்வு அமைப்பினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதனையடுத்து ரோக் ஹோ சான் தங்கியிருந்த அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதோடு, அவர் 3 கடிதங்களை எழுதி வைத்திருந்தார்.

அதில், நான் லஞ்சம் பெற்றது உண்மை. நான் தவறு செய்து விட்டேன். எனவே, எனது வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என்று எழுதப்பட்டு இருந்தது.

இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதை பொலிஸார் உறுதி செய்து கொண்டனர். ஆனால், அவர் எப்படி தற்கொலை செய்து கொண்டார்? என்ற விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.

SHARE