நெடுங்கேணி ஒலுமடு கிராமசேவகர்பிரிவில் அதிகளவு தென்னம்பிள்ளைக்கு சிவப்பு வண்டுத்தாக்கம் அதிகரித்து வருவதனால் அதனைக்கட்டுப்படுத்தும் நோக்கோடு விவசாயிகளுக்கு மருந்து வழங்கப்பட்டுள்ளது.
ஒலுமடு கிராமசேவகர் பிரிவில் 200 பயனாளிகளுக்கும் கீரிசுட்டான் கிராமத்தில் 100 பயனாளிகளுக்கும் தென்னை ஆராய்ச்சி நிலையத்தினால் இலவசமாக பெரமோன் ஓமோன் 10பொறி.என்ற மருந்தினை வழங்கி தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் யாழ்ப்பாண உதவி பிராந்தியத்தின் முகாமையாளர் ஆர்.எம்.பி.மட்வேல அவர்களும் தெங்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.சத்தியேந்திரன் அவர்களும் மக்களுக்கான தென்னனையை பாதுகாப்பது தொடர்பான விழிப்புனர்வு கருத்தரங்கும் செய்முறையும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு.
ந.கலைச்செல்வன்.