தென்னாசிய நாடுகளில் சீனாவின் முதலீடுகள் இந்தியாவை கட்டுப்படுவதற்கான தந்திரோபாய நடவடிக்கைகளே –

269

இலங்கையிலும்  ஏனைய தென்னாசிய நாடுகளிலும் சீனா மேற்கொண்டுள்ள முதலீடுகள் இந்தியாவை கட்டுப்படுவதற்கான தந்திரோபாய நடவடிக்கைகளே என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்திய விமானப்படையின் தளபதி எயர்சீவ் மார்சல் அரூப் ராஹா இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை, பாக்கிஸ்தான்,நேபாளம் உட்பட தென்னசிய நாடுகளில் சீனா மேற்கொண்டுள்ள முதலீடுகள் இந்தியாவை கட்டுப்படுத்தும் தந்திரோபாயத்தை அடிப்படையாக கொண்டவை.
திபெத்தில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் உயரமான விமானநிலையம்,உலகின் நீளமான புகையிரதப்பாதை, பாக்கிஸ்தானில் குவார்டர் துறைமுகம்,இலங்கையுடனான பொருளாhர உறவுகள் என அனைத்துமே இந்தியாவை கட்டுப்படுத்துவதற்கான தந்திரோபாய நடவடிக்கைகள், என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

சீனாவின் இலங்கைப் பிரசன்னம் ஓர் தந்திரோபாய நகர்வாகும் – இந்தியா:-
சீனாவின் இலங்கைப் பிரசன்னம் ஓர் தந்திரோபாய நகர்வாகும் என இந்தியா தெரிவித்துள்ளது.
இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் சீனா முதலீட செய்து வருவதாகவும், இந்த முதலீடுகள் தந்திரோபாய நகர்வாக கருதப்பட வேண்டுமெனவும் இந்திய விமானப்படை தளபதி மார்ஸல் அருப் ராஹா தெரிவித்துள்ளார்.
இலங்கை, பங்களாதேஸ், பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் சீனா முதலீடு செய்து வருவதாகவும் இதனை வர்த்தக நோக்கமாக நோக்குவதனை விடவும் தந்திரோபாய ரீதியான நோக்கமாகவே கருதப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE