தென்னாபிரிக்கா உயர்ஸ்தானிகர் ஜிஓப் டொய்ட்ஜ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இன்று (19) அவரது அமைச்சில் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினார்.
உயர் ஸ்தானிகராலய அரசியல் ஆலோசகர் செல்வி சி. ஜொபேர்ட் அவர்களும் இதில் பங்குபற்றினார்.
இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை காண்பதற்கு வழிவகுக்கும் வகையில் உத்தேச அரசியலமைப்பு சீர்த்திருத்தமானது சகல சமூகத்தினரையும் திருப்திப்படுத்தக் கூடியதாக அமைய வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உயர் ஸ்தானிகரிடம் வலியுறுத்தினார்.