தென்னாபிரிக்கா – கம்போடிய அனுபவங்களை இலங்கையின் விசாரணை பொறிமுறைக்கு பயன்படுத்துமாறு கோரிக்கை

265

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் உட்பட முக்கிய தலைவர்கள் சிலரிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதமொன்றில் தென்னாபிரிக்கா ,மற்றும் கம்போடியா போன்ற நாடுகளின் அனுபவங்களை இலங்கையின் விசாரணை பொறிமுறைக்கு பயன்படுத்துமாறு இலங்கையின் கல்விமான்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரம் சமீபகாலத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால்,முழுமையான உள்நாட்டு பொறிமுறை மூலம் நீதியை நிலைநாட்ட முடியாது, பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை பெற முடியாது என நாங்கள் கருதுகின்றோம்,மேலும் வெறுமனே சர்வதேசபிரதிநிதிகளின் பிரசன்னம் மாத்திரம் போதுமானதல்ல எனவும் நாங்கள் கருதுகின்றோம்.
விசாரணைபொறிமுறைகளுடன் தொடர்புபட்டவர்களை தென்னாபிரிக்கா, கம்போடியா போன்ற நாடுகளின் அனுபவங்களை அறிந்துகொள்ளுமாறும்,அதனை இலங்கையில் ஏற்படுத்தப்படவுள்ள கட்டமைப்புகள் மற்றும் செயற்பாடுகளில் பயன்படுத்துமாறும் நாங்கள்கேட்டுக்கொள்கின்றோம், இலங்கையின் கல்விமான்கள் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

SHARE