தென்னிலங்கை அரசியல் நெருக்கடியில்
த தே கூ பின் செயல்பாடு தமிழர் நலன் சார்ந்து உள்ளதா?
திரு சுமந்திரன் அவர்களின் நகர்வுகள்
ஐ தே க கட்சியின் முன்னனி பிரமுகராக செயலாற்றுவதை ஐயம் தெளிவுற காட்டிநிற்கிறது. இதன் சரிபிழையை உற்றுநோக்கினால் தமிழரசுக்கட்சி ஆட்சி அதிகாரங்களை ஐ தே க வுக்கு மீண்டும் பெற்றுக் கொடுக்கவே போராடுகிறது.
இத்தைகைய செயல்பாடுகளால் தமிழர் அடைய போகும் நன்மைகள் யாது?
சர்வதேசம் இன்று மீண்டும் தான் சார்ந்த அரசை கொண்டுவர பெரும் முயற்சியை மேற்கொள்கிறது.இதற்காக பல தடைகளை இலங்கை மீது விதித்துள்ளனர். குறிப்பாக உலக நாணய நிதியம் தான் வழங்கவிருந்த கடனை நிநிறுத்தியுள்ளது.
இதுபோன்றே யப்பான் அமெரிக்கா தனது வருடாந்த உதவித்தொகையை நிறுத்தியுள்ளது. யூரோப்பியன் யூனியன்
G S P பிளசை நிறுத்துவதற்கு தீர்மானிக்கிறது. இவ்வளவு அழுத்தமும் பாராளுமன்றில் ஆளும் அரசுக்கு அறுதி பெரும்பாண்மை அற்ற நிலையை கருத்தில் கொண்டே மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வளவு விடயங்களும் சர்வதேச அனைத்து தரப்பும் திரு சம்பந்தனுடன் சுமந்திரனுடன் கலந்தாய்வு செய்தே மேற்கொள்கிறது. இது ஒரு நல்லவிடயம் உண்மையில் ஆட்சியை இழந்த கடந்த அரசுக்காக இவ்வளவு சர்வதேச அழுத்தமும் த தே கூ பின் ஆதரவுடன் வழங்க படுவதையிட்டு ஆச்சரியமடைகிறேன்.
இவ்வேளையில் கேள்விகளும் எழுகின்றன? எந்த அடிப்படையில் தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு ஆதரவை வழங்க முன்வந்தீர்கள்? சர்வதேசம் உங்களுக்கு எழுத்துமூலமாக ஏதாவது உறுதிமொழி வழங்கியதா? தமிழ் மக்களின் உரிமைகளை கருத்தில் கொள்வதாக அதற்கான அழுத்தங்களை இதுபோன்றே வழங்குவதாக உறுதி மொழிகள் தரப்பட்டனவா?
இவ்வாறு வழங்கியிருந்தால் இவற்றை மக்களிடம் தெரிவித்து ஆதரவை வழங்குங்கள்.ஆனால் நடக்கும் விடயங்களை அவதானிக்கும் போது ஒரு விடயம் புரிகிறது. நீங்கள் ஐ தே க வை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக எம் மக்கள் தந்த ஆணையை புறக்கணித்து மறந்து தன்னிச்சையாக செயல்படுகிறிர்கள்.
சர்வதேசம் தமது பொருளாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த தான் சார்ந்த அரசை நிறுவ முயற்சிகளை மேற்கொள்ளும் அவ்வேளை எமக்கு ஒரு கடப்பாடு உள்ளது. சில பல ஒப்பந்தங்களை அத்தரப்போடு செய்து கொள்ளமுடியும். உடனடியாக அரசால் மேற்கொள்ளக்கூடிய அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து கொள்ளும் உறுதிமொழிகளை பெறுவது.
நீண்டகால அடிப்படையில் எமது இலக்கை அடைவதற்கு அவர்கள் ஊடாக அழுத்தங்களை பிரயோகித்து சாத்தியமாக்குவது,,, இதுவே தற்போது நாம் ஆற்றவேண்டிய கடமை.
இவ்வாறான உறுதிமொழிகளை பெற்ற பின்பே ஆட்சி அதிகாரங்களை நியமிக்கும் தரப்பாக மாறவேண்டும். இல்லையேல் சிவசக்தி ஆனந்தனை போன்று நடுநிலமை வகித்து நாம் விலகி நிற்பதே சிறப்பு.
எமக்கு தெரியும் நாம் குறிப்பிட்டது போன்று நீங்கள் செயல்படமுடியாது. காரணம் நீங்கள் அரசு முதற்கொண்டு சர்வதேசம் வரைக்கும் சலுகைகளை பெற்றுவீட்டிர்கள்.தற்போது நீங்கள் தலையாட்டி பொம்மைகள் அவர்கள் போடும் தாளத்துக்கு ஆடுவதே உங்களுக்கு விதிக்கபட்ட பணி. பாவம் உங்களுக்கு வாக்களிச்ச மக்கள்.
கட்சி முக்கியமா மக்கள் தந்த ஆணை பெரிதா? கட்சியின் நிலைபாடே சரி என மக்கள் தந்த ஆணையை புறந்தள்ளி பிரேரணைக்கு ஆதரவாக கையேழுத்தும் போட்டுவிட்டு வெளியில் தமிழ்த்தேசியம் பேசும் நடிகர்களை என்ன செய்வது?
அபிவிருத்தியுமில்லை. பிரச்சனைக்கு தீர்வும் இன்றி அல்லல்படுகிறார்கள் மக்கள். இவற்றுக்கான பரிசு விரைவில் மக்கள் தேர்தல் மூலமாக தருவார்கள்.