தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் அசத்தல்: கோஹ்லியை பின்னுக்கு தள்ளிய ரஹானே

330
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்சிலும் சதம் அடித்த ரஹானே தரவரிசையில் அதிக முன்னேற்றம் அடைந்துள்ளார்.அவர் 14 இடங்கள் முன்னேறி 12வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதன் மூலம் இவர் டெஸ்ட் அணித்தலைவர் கோஹ்லியை முந்தியுள்ளார். கோஹ்லி 2 இடங்கள் முன்னேறி 14வது இடத்தை பிடித்துள்ளார்.

மேலும், முரளி விஜய் நான்கு இடங்கள் பின்தங்கி 16வது இடத்திலும், புஜாரா 2 இடங்கள் பின்தங்கி 17வது இடத்திலும் உள்ளனர்.

அதே போல் பந்து வீச்சு தரவரிசைப் பட்டியலில் தென் ஆப்பிரிக்க தொடரில் 23 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஜடேஜா அதிகமாக முன்னேற்றம் கண்டுள்ளார்.

கடைசி டெஸ்டில் 7 விக்கெட்டுக்கள் வீழ்த்திய அவர் 11வது இடத்தில் இருந்து நான்கு இடங்கள் முன்னேறி 7வது இடத்தை பிடித்துள்ளார்.

31 விக்கெட் எடுத்த அஸ்வின் 871 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். சகலதுறை வீரர் தரவரிசையில் அவர் முதல் இடத்தில் உள்ளார். ஸ்டெயின் 4 புள்ளிகள் கூடுதல் பெற்று 875 புள்ளிகளுடன் முதல் இடத்தில் தொடருகிறார்.

SHARE