தென் ஆப்ரிக்காவுக்கு சவாலான இந்திய அணி: விரைவில் தெரிவு?

284
தென் ஆப்ரிக்காவுக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென் ஆப்ரிக்க அணி 72 நாட்கள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இருஅணிகளும் 3 ‘டுவென்டி–20, 5 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ளன.

இந்நிலையில் இந்திய அணியை தெரிவு செய்வதற்கான நிர்வாகிகள் கூட்டம் வருகிற 15ம் திகதி டெல்லியில் நடக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னதாக வீரர்கள் அனைவரும் உடற்தகுதி சான்றிதழை அனுப்பும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

‘டுவென்டி–20’, ஒருநாள் போட்டிக்கான அணியை பொறுத்தவரையில் டோனி தலைமையில் வழக்கமான வீரர்கள் இடம் பெற்றுவிடுவர்.

டெஸ்ட் அணியை பொறுத்த வரையில் இலங்கையில் கோஹ்லி பயன்படுத்திய டெக்னிக்கை பயன்படுத்த நினைத்தால், 5 பந்துவீச்சாளர் இடத்துக்கு ஆல் ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி சரியான தெரிவாக இருப்பாரா என சந்தேகிக்கப்படுகிறது.

ஒருவேளை துடுப்பாட்டத்தில் பின்னியை விட சிறப்பாக செயல்படும் புவனேஷ்வர் குமாரை, 5வது பந்துவீச்சாளராக களமிறக்கி பார்க்கலாம்.

எது எப்படி இருப்பினும், வலிமையான தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக 7 துடுப்பாட்ட வீரர்களுடன் களமிறங்குவது தான் சரியாக இருக்கும்.

SHARE