தென் மாகாணத்திலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் பட்டதாரிகளை சேர்த்துக்கொள்ள தென் மாகாண கல்வி அமைச்சு விண்ணப்பம் கோரியுள்ளது.
கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், நாடகம், அரங்கியற்கலை, சித்திரம், நடனம், சங்கீதம், சுகாதாரமும் உடற்கல்வியும், தகவல் தொழிநுட்பம், விவசாயம், ஆரம்ப கல்வி, தமிழ் மொழி, வரலாறு, குடியியற்கல்வி, அரசறிவியல், புவியியல், இந்து சமயம், கிறிஸ்தவ சமயம், இஸ்லாம் சமயம், இரண்டாம் மொழி சிங்களம், வியாபாரக் கல்வி, இந்து நாகரிகம், பொருளியல், ஆகிய பாடங்களை கற்பிக்கவே இவ்விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய இறுதி திகதி இம்மாதம் 15ஆம் திகதியாகும்.