தெமட்டகொட சமிந்த மீதான துப்பாக்கிப் பிரயோகத்துக்கு உளவு பார்த்த ஜீப் சிக்கியது – உ ரிமையாளர் தலைமறைவு

241

தெமட்டகொட சமிந்த மீதான துப்பாக்கி பிரயோகத்துக்கு உளவு பார்த்த ஜீப் வண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலை வழக்கின் மூன்றாவது சந்தேகநபரான தெமட்டகொட சமிந்த மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்படுவதற்கு முன் அவரது நடமாட்டத்தை உளவு பார்ப்பதற்காக அமர்த்தப்பட்டிருந்ததாகக் கருதப்படும் பெஜேரோ ரக மினி ஜீப் ஊறுகொடவத்த கராஜ் ஒன்றிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப் பிரிவின் குழுவொன்று நேற்றுமுன்தினம் குறிப்பிட்ட கராஜை சோதனையிட்டபோது இந்த மினி ஜீப் பிடிபட்டது.

மேலும், அது கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த ‘பொடி உணா’ என அழைக்கப்படும் சந்தேகநபருக்குச் சொந்தமானது எனவும், அவர் தற்சமயம் பிரதேசத்தை விட்டுத் தலைமறைவாகியுள்ளார் எனவும் சோதனையை மேற்கொண்ட குழுவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
download (1)
கைப்பற்றப்பட்ட ஜீப் மேலதிக சோதனைகளுக்காக கொழும்பு பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

SHARE