கேகாலை மாவட்டம் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்கு உட்பட்ட தெரணியகலை கதிரேசன் தமிழ் மகா வித்தியாலயம் தெரணியகலை பிரதேசத்திற்கு ஒரு சிறந்த பாடசாலையாக மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகளை கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் முன்னெடுத்து வருகின்றார். அதன் அடிப்படையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் எண்ணக்கருவில் உருவான மலையகத்தில் 25 கணித விஞ்ஞான பாடசாலை செயல்திட்டத்தில் இப்பாடசாலை உள்வாங்கப்பட்டுள்ளதுடன் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயல்திட்டத்தில் ‘ஏ’ தரத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளது. இவை செயல்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் பாடசாலை பாரிய அபிவிருத்தியை நோக்கி செல்வதுடன் பிரதேச மாணவர்களின் கல்வி அபிவிருத்தி மேன்மை அடையும் என்பதில் ஐயமில்லை. இந்த அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு போதிய இட வசதி இன்மை காரணமாக பிரதேச அரசியல்வாதிகள் புத்திஜீவிகளின் முயற்சியில் பிறிதொரு இடத்தில் 2 ஏக்கர் காணி பெறப்பட்டுள்ளது. இந்த காணியை பார்வையிடுவதற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் தலைமையிலான குழுவினர் தெரணியகலை பிரதேசத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
தகவலும் படங்களும் :- பா.திருஞானம்