தெரிவுப் பணிகளை முதலில் இருந்து தொடங்க நேரிட்டுள்ளது – சனத் ஜயசூரிய:-

296
தெரிவுப் பணிகளை முதலில் இருந்து தொடங்க நேரிட்டுள்ளது – சனத் ஜயசூரிய:-

தெரிவுப் பணிகளை முதலில் இருந்து தொடங்க நேரிட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் அணியின் தெரிவாளர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கட் அணியின் தெரிவாளராக நேற்று முன்தினம் சனத் ஜயசூரிய கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழுவில் தலைவராகவும் உறுப்பினராகவும் சனத் ஜயசூரிய கடமையாற்றியுள்ளார்.
இலங்கைக் கிரிக்கட் துறைக்கு 100 வீதமான பங்களிப்பினை வழங்க தாம் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மைக்க காலமாக இலங்கை கிரிக்கட் அணி பின்னடைவை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மீளவும் அணியின் திறமைகளை வெளி;க்கொணரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

SHARE