பிரித்தானிய நாட்டில் நடந்து முடிந்துள்ள பொது தேர்தலில் ஆளும் மற்றும் எதிர்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் கன்சேர்வேடிவ் கட்சியின் பிரதமரான தெரேசா மேயின் சமீபத்திய அரசியல் நடவடிக்கைகள் இந்த பின்னடைவிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
கடந்த 2001 முதல் 2010 வரை பிரித்தானிய முன்னாள் பிரதமரான டோனி பிளேயர் தலைமையில் லேபர் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் இரண்டு முறை ஆட்சியை பிடித்தது.
ஆனால், 2010-வது ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை இல்லாமல் பழமைவாதக் கட்சியான கன்சேர்வேடிவ் முதன்முதலாக ஆட்சியை பிடித்தது.
அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த டேவிட் கமெரூன் முதன்முதலாக பிரதமராக பதவியேற்றார்.
டேவிட் கமெரூனின் முதல் ஆட்சியில் பிரித்தானிய பல்வேறு வளர்ச்சிகளை கண்டதால் கன்சேர்வேட்டிவ் கட்சி மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, 2015-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் மக்கள் செல்வாக்கு பெற்ற கன்சேர்வேடிவ் கட்சி 330 ஆசனங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது.
கமெரூன் இரண்டாவது முறையாக பிரதமர் பதவி வகித்தது முதல் அவரது கட்சிக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டு வந்துள்ளது.
கன்சர்வேட்டிவ் கட்சிக்குள்ளேயே பிரதமராக இருந்த டேவிட் கமெரூனுக்கு ஆதரவு இல்லாதது, ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதாக முடிவெடுத்தது, டேவிட் கமெரூன் பதவி விலகிய பின்னர் கன்சேர்வேடிவ் கட்சியின் செயல்பாடுகள் என மக்கள் மத்தியில் அக்கட்சியின் செல்வாக்கை குறைத்தன.
இவையெல்லாமே நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பிரதிபலித்தன, இதை பற்றிய மேலும் விபரங்களுக்கு