தெரேசா மேவின் ஆண்டு ஊதியம் எவ்வளவு தெரியுமா?

174

பிரித்தானியாவின் பிரதமராக தெரேசா மே பொறுப்பேற்ற பின்னர் அவருக்கான ஆண்டு ஊதியம் எவ்வளவு என்பது தான் பொதுமக்கள் மத்தியில் எழுந்த கேள்வி.

பிரித்தானிய பிரதமர் தெரேசா மேவின் ஆண்டு ஊதியம் £150, 402 என தெரிய வந்துள்ளது. இதில் எம்.பி.களுக்கு வழங்கப்படும் ஆண்டு ஊதியமான £74, 962 சேர்க்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த 2016 ஏபரல் மாதம் பிரதமருக்கான ஆண்டு ஊதியத்தை உயர்த்தி £152, 532 என முடிவு செய்தனர். ஆனால் குறித்த முடிவை 2020 ஆம் ஆண்டுவரை ஒத்தி வைத்துள்ளது.

தெரேசா மே தற்போது பெற்றுக் கொள்ளும் அதே அளவு ஊதியத்தை முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் தாம் பதவி விலகும் வரை பெற்று வந்தார்.

கேமரூன் ஆட்சிக்கு வரும் முன்னர் பிரதமராக இருந்த Gordon Brown ஆண்டுக்கு £150,000 ஊதியமாக பெற்றுள்ளார்.

இது இப்படி இருக்க பிரித்தானியாவின் பிரபல செய்தி ஊடகத்தின் உயரிய பொறுப்பில் இருக்கும் பலரும் பிரதமர் தெரேசா மேவை விடவும் அதிகம் ஊதியமாக பெறுகின்றனர். சுவாரசியம் என்னவெனில் சராசரி பிரித்தானியர் ஒருவரின் ஆண்டு வருவாய் என்பது சுமார் £28, 200 என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE