தெர்மடோல் போதை மாத்திரைகளுடன் இளம் ஜோடி கைது

136

வவுனியா பகுதியில் 70 ஆயிரம் ரூபா பெறுமதியான தெர்மடோல் போதை மாத்திரைகளை காரில் கடத்த முயன்ற இளம் ஜோடியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் வைத்து 24 மற்றும் 18 வயதுடைய இளம் ஜோடியை காரில் பயணித்த போது பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து 70.000 ரூபா மதிப்புடைய தெர்மடோல் போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.

மேலும் கடத்தல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE