விஜய்யின் புதியபடத்தின் புதுப்புது தகவல்கள் வராதா என காத்திருக்கும் ரசிகர்கள் எத்தனையோ பேர். ஆனால் தற்போதோ ஸ்டிரைக் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவர்களுக்கெல்லாம் ஒரு சந்தோசமான செய்தி.
விஜய்யின் படங்களில் 2001 ல் ஏப்ரல் 12 ல் வெளியான படம் பத்ரி. அருண் பிரசாத் இயக்கிய இப்படத்தில் அவருக்கு ஜோடியானார் பூமிகா. ரமணா கோகுலா, தேவி ஸ்ரீ பிரசாத் என இருவரும் இசையமைத்தார்கள்.
இப்படத்தில் விஜய் என்னோட லைலா என ஒரு பாடலை பாடியிருந்தார். இப்படம் 17 வருடங்களை கடந்துவிட்டது. இதனால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.