‘தெறி’ பட டீஸரை யூ டியூபிலிருந்து நீக்கியது யார்? விஜய் அதிர்ச்சி

283

‘தெறி’ பட டீஸரை  யூ டியூபிலிருந்து நீக்கியது யார்? விஜய் அதிர்ச்சி

விஜய் நடிக்க அட்லி இயக்கும் படம் ‘தெறி’. இப்படத்துக்கு பெயர் வைப்பதிலிருந்ேத பிரச்னை தொடங்கியது. சில தலைப்புகள் தேர்வு செய்தபோது ஏற்கனவே அந்த டைட்டில்கள் பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து தலைப்பு வைப்பதற்கு தாமதம் ஆனது. இறுதியாக ‘தெறி’ டைட்டில் வைக்கப்பட்டது. வரும் ஏப்ரல் மாதம் படத்தை திரையிடுவதற்காக திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இதன் டீஸர் வெளிவருவதை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு யூ டியூபில் டீஸர் வெளியானது.

டீஸர் வெளியான சிறிது நேரத்தில் சுமார் 10 லட்சம் பேர் பார்த்தனர். சிறிது நேரத்தில் யூ டியூபிலிருந்து டீஸர் நீக்கப்பட்டது. இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதையறிந்து விஜய், அட்லி, தயாரிப்பாளர் எஸ்.தாணு அதிர்ச்சி அடைந்தனர். இயக்குனரை தொடர்பு கொண்டு பல ரசிகர்கள், ‘டீஸர் நீக்கப்பட்டது ஏன்?’ என்று கேட்டனர். நீண்ட நேரத்துக்கு பிறகு மீண்டும் டீஸர் வெளியானது. இதுபற்றி இயக்குனர் அட்லி கூறும்போது,’வெளியிட்டதிலிருந்து அதிக வரவேற்பை பெற்ற தெறி டீஸரை யாரோ சதி செய்து நீக்கி இருக்கிறார்கள். அது யார் என்று கண்டுபிடிக்கும் வேலை நடக்கிறது’ என்றார்.

SHARE