தெறி விழாவில் விஜய் சொன்ன குட்டி கதை

252

தெறி விழாவில் விஜய் சொன்ன குட்டி கதை - Cineulagam

இன்று தெறி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த ட்ரைலரும் வெளியிடப்பட்டது.

விழாவில் விஜய் பேசும்போது ஒரு குட்டி கதை கூறி அனைவரையும் கவர்ந்தார். “நாம் டிஸ்கவரி டிவி’ல பார்த்திருப்போம். ஒரு புலி மான்கூட்டத்தை துரத்திக் கொண்டு ஓடும். அப்போது ஒரு குறிப்பிட்ட மானை மட்டும் இலக்காக வைத்துக்கொண்டு, அதை கூட்டதிலிருந்து பிரித்து அதை வேட்டையாடி கொள்ளும். அந்த புலிதான் கலைப்புலி. வெற்றி என்ற ஒன்றை மட்டுமே சினிமாவில் இலக்காக கொண்டு, அதை தேடி பிடித்து புலியாக வேட்டையாடி வருகிறார்.”

இந்த கதை விழாவிற்கு வந்திருந்தவர்கள் மத்தியில் கைதட்டல்களை அள்ளியது.

SHARE