தெற்கு அதிவேகப் பாதை மற்றும் கட்டுநாயக்க அதிவேகப்பாதை என்பவற்றிட்கான உரிமை தனக்கே உரியது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹிந்தவின் ஆட்சியில் குறித்த அதிவேகப்பாதைகள் நிர்மாணிக்கப்பட்ட போது தனது பெயர் பலகைகள் அப்புறப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் அவர்கள் அமைத்த அலுவலகத்தை தனக்கு திறந்து வைக்க முடியாது என ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் தான் நிர்மாணப்பணிகளை முன்னெடுத்த அதிவேகப் பாதைகளைமஹிந்த திறந்து வைக்கும் போது அவர்களது அலுவலகத்தை தான் திறந்து வைப்பதில் தவறு இல்லை என்றும் சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிறுவனத்திற்கு வெறும் 20 இலட்சமே மஹிந்த தரப்பு செலவிட்டுள்ளதாகவும் சந்திரிக்கா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்டதை இந்த ஆட்சியில் திறந்து வைத்தோம் என்று தெரிவித்துள்ள அவர் தன்னுடைய பெயர் பலகையை கழற்றி எரிந்துவிட்டு அதிவேகப்பாதையை மஹிந்த திறக்கும் போது தாங்கள் கூக்குரலிடவில்லை என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.